சிறார் இலக்கியத்தில் இடையன் இடைச்சி நூலகத்தின் முதல் முயற்சி...
சாந்தநாயகம் ஆணா, பெண்ணா?
கதை: Camera-etc, தன்னார்வ நிறுவனம், பெல்ஜியம்.
தமிழில்: நர்மதா தேவி.
ஓவியங்கள்: A. ஜீவானந்தம்.
விலை: 50 ரூபாய்/-
___
“நீ பொண்ணு!
இப்படித்தான் இருக்கணும்...
இப்படித்தான் முடி வளக்கணும்…
இப்படித்தான் நீ டிரெஸ் போடணும்...
பூ மாதிரி, பட்டாம்பூச்சி மாதிரி மென்மையா நீ இருக்கணும்…”
“நீ ஆண் பிள்ளை!
இப்படித்தான் இருக்கணும்...
இப்படித்தான் நீ டிரெஸ் போடணும்…
நீ ஆம்பள சிங்கம், அழக்கூடாது..."
அனுதினமும் இப்படிப் பாலின ரீதியான கட்டுப்பாடுகளை, விதிகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு, 'ஏன் இப்படி நம்மை ஆண், பெண் எனப் பாகுபடுத்துறாங்க? இது சரியா? இது நியாயமா?' என்கிற கேள்விகள் வெகு இயல்பாக எழும்.
"சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?" என்கிற இந்த சிறார் படக்கதை நூல், அந்தக் கேள்விகளுக்கு, நியாயமான, உண்மையான பதிலைச் சொல்கிறது...
பெல்ஜியம் நாட்டில் செயல்படுகின்ற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து இந்தக் கதையை உருவாக்கியது. அதை பிரெஞ்சு மொழியில் ‘கசின் பர்ட்’ (Cousin Bert) என்ற பெயரில் 4 நிமிட அனிமேஷன் குறும்படமாக அந்த நிறுவனம் தயாரித்தது. குழந்தைகளுக்கு அனிமேஷன், திரைக்கதை, எடிட்டிங் போன்ற படத்தயாரிப்பு அம்சங்களைக் கற்றுக்கொடுத்து, அவர்களைக் கொண்டே அந்தப் படத்தைத் தயாரித்தது என்பது முக்கிய அம்சம்.
இந்தக் குறும்படத்தை ‘சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?’ என்ற தலைப்பில் தமிழில் சிறார் படக்கதை நூலாக உருவாக்கும் பணியை, ஊடகவியலாளரும், சி.பி.ஐ(எம்) கருவூலத்தின் (டிஜிட்டல் ஆவணக்காப்பகம்) ஒருங்கிணைப்பாளருமான தோழர் நர்மதா தேவி செய்திருக்கிறார். Camera-etc நிறுவனத்தின் முறையான அனுமதியோடு, இடையன் இடைச்சி நூலகத்துடன் இணைந்து, சிறார் படக்கதை நூலாக உருவாக்கி இருக்கிறார். Camera-etc நிறுவனத்துக்கு எமது நன்றிகள்!
கண்களில் ஒற்றிக்கொள்ளும் அழகிய ஓவியங்களை A. ஜீவானந்தம் வார்த்துக்கொடுத்திருக்கிறார். அவருக்கும் எமது நன்றிகள்!
மிக அழகிய, எளிமையான, ஆழமான கதை இது...
பாலின சமத்துவம் குறித்து அழகாகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் படக்கதை...
130 gsm தாளில் பலவண்ணக் படக்கதைப் புத்தகமாக, 32 பக்கங்களில், 50 ரூபாய் என்கிற ஓரளவு வாங்கக்கூடிய விலையில் கொண்டுவந்துள்ளோம்.
பாலின சமத்துவம் பற்றிய முறையான மற்றும் சரியான புரிதலை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க தொடர்புகொள்ளவும்...
available for online purchase
continue to order your copies
top of page
₹50.00Price
bottom of page